Popular Posts

Thursday 21 November 2013

டி.என்.பி.சி குருப் -4 தேர்வு ரிசல்ட்

குருப் -4 தேர்வு விரைவில் வெளியாகவுள்ளது.

                   டி.என்.பி.சி தலைவர் ந,கிருஷ்ணமுர்த்தி இது பற்றி கூறுகையில்,
 முன்றறை இலட்சம் பேர் எழுதிய குருப் 4 தேர்வு வரும் டிசம்பர் மாதத்திற்குள் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
இதற்கான ரிசல்ட்டை தெரிந்து கொள்ள நானும் ஆர்வமுடன் உள்ளேன்
                    

Wednesday 30 October 2013

ஐந்தாண்டு திட்டங்கள்

முதலாம் ஐந்தாண்டுத் திட்டம்:(1951-1956)

 இந்திய அரசு ,தனது முதலாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் , உணவு உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது.விவசாயம் மற்றும் சமுதாய மேம்பாடு, பாசனம் மற்றும் மின்னுற்பத்தி, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புத் துறை, சமூக சேவைகள் மற்றும் புனர்வாழ்வு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவதே முதல் திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்த்தது.

இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டம் (1956-1961)

கிராமப் புற இந்தியாவை சீரமைத்தல் , தொழல் துறை வளர்ச்சிக்கான அடிக்கல்லை நாட்டுதல், பின்தங்கிய மக்களின் வளர்ச்சிக்காக அதிக பட்ச வாய்ப்புகளை உருவாக்குதல் மற்று நாட்டின் அனைத்துப் பகுதிகளும் ஒரே சீராக வளர்ச்சி அடைவதை உறுதிசெய்தல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கங்களாக இருந்தன.

மூன்றாம்  ஐந்தாண்டுத் திட்டம்(1961-1966)

முதல் மற்றும் இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டங்களின் நீட்சியாக இத்திட்டம் அமைந்தது.மேலும் நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தை நோக்கி இந்திய மக்களை இட்டுச்செல்லும் வழிகாட்டியாகவும் இது அமைந்துள்ளது

நான்காம் ஐந்தாண்டுத் திட்டம்(1969-1974)

மக்களின் வாழ்க்கைத் தரத்தை- குறிப்பாக பின்தங்கிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை- உயர்த்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.உற்பத்தியைப் பெருக்குவது மட்டுமின்றி ஈட்டப்பட்ட செல்வத்தை மக்கள் அனைவருக்கும் சமமாகப் பிரித்து வழங்குவதும் முதலிடத்தைப் பெற்றன.நாட்டின் செல்வமும் பொருளாதார சக்தியும் சில இடங்களில் மட்டுமே குவிந்திருக்காமல் அவற்றைப் பரவலாக்குவது தலையாய பனி ஆயிற்று.
ஐந்தாம் ஐந்தாண்டுத் திட்டம்(1974-1979)==
உலக அளவில், உணவுப் பொருட்கள், உரம் போன்ற விவசாய இடுபொருட்கள் மற்றும் எண்ணெய்  ஆகியவற்றின் விலைகள் பெரிதும் உயர்ந்தன. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது அவசரத்தேவையாக இருந்தது.1974-75 இன் மத்தியில் இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் பிற நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.

ஆறாம் ஐந்தாண்டுத் திட்டம் (1980-1985)


வறுமை, வேலை இல்லாத் திண்டாட்டம் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றைக் களைதல்  ஆகியவை இந்த திட்டத்தில் முதலிடம் பெற்றன.

ஏழாம் ஐந்தாண்டுத் திட்டம் (1985-1989)

உணவு தானிய உற்பத்தி,வேலை வாய்ப்பைப் பெருக்குதல் மற்றும் மக்களின் உற்பத்தித் திறனைப்  பெருக்குதல் போன்றவை முக்கியத்துவம் பெற்றன.

எட்டாம் ஐந்தாண்டுத் திட்டம் (1992-1997)

உணவு உற்பத்தியில்  இந்திய நாடு ஏறத்தாழ தன்னிறைவு அடைந்துவிட்டது. தொழில் துறை மற்றும் சேவை வழங்கும் துறைகளும் நன்கு முன்னேறி இருந்தன. ஆனால் நிதிப்பற்றாக்குறை, பொதுக்கடன்  , நலிந்து வரும் அந்நியச் செலாவணி கையிருப்பு மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கம் ஆகியவற்றை எதிர்த்துப் போரிட வேண்டிய அவசியம் உருவாகி விட்டது.
எட்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் கீழ்காண்பவை முன்னுரிமை பெற்றன:
# அதிகமான அளவில் வேலைவாய்ப்பினை உருவாக்குவதன் மூலம் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் முழு அளவு வேலைவாய்ப்பினை எட்டுதல்
# மக்களின் ஒத்துழைப்பின் மூலமும் ஊக்கத்திட்டங்கள் மற்றும் ஊக்கத்தொகைகளை விளக்கிக்கொள்ளுதல் ஆகியவற்றின் மூலமும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துதல்
# அனைவருக்கும் ஆரம்பக் கல்வி அளித்தல் மற்றூம் 15 முதல் 35 வயது வரை உள்ள மக்களிடத்து காணப்படும் எழுத்தறிவின்மையைப் போக்குதல்
# அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடி நீர்  வழங்குதல்,அடிப்படை மருத்துவ வசதிகளை அளித்தல் , நோய் தடுப்பு முறைகளை அளித்தல் மற்றும் தோட்டிப் பணிகளை அற்வே ஒழித்தல்
# விவசாய வளர்ச்சி, பல்வகைப் பயிர்களைப் பயிரிடல் மற்றும் ஏற்றுமதி செய்யக் கூடிய அளவுக்கு தானிய உற்பத்தியைப் பெருக்குதல்
# மின்னாற்றல், போக்குவரத்து, தவகவல் தொடர்பு மற்றும் பாசனம் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளைப்  பெருக்கி வளர்ச்சிப் பணிகளைத் தடையின்றி நீடிக்கச் செய்தல்.

ஒன்பதாம் ஐந்தாண்டுத் திட்டம் (1997-2002)

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்துக்கும் இடையில் உள்ள ஒருங்கிணைந்த உறவை ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டம் அங்கீகரித்தது.காலங் காலமாக நிலவி வரும் சமுதாய வேறுபாடுகளைக் களைந்து ஏழை எளிய மக்களின் நல்வாழ்வுக்கு ஆதரவு அளிக்கும் கொள்கைகளை உருவாக்குவதில் அரசு உறுதியாக உள்ளது."சமூக நீதி மற்றும் சமத்துவத்துடன் இணைந்த வளர்ச்சி " என்பதே இத்திட்டத்தின் தாரக மந்திரம்.

தேசிய வளர்ச்சிக் குழு, கீழ் காண்பவற்றை ஒன்பதாவது ஐந்தானண்டுத் தித்தின் முக்கிய நோக்கங்கள் எனக் குறிப்பிட்டது.
#வேலை வாய்ப்பைப் பெருக்குதல் மற்றும் வறுமையை ஒழிப்பு ஆகியவற்றுக்காக விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளித்தல்
#விலைவாசிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அதே நேரத்தில் வளர்ச்சி வேகத்தை அதிகரித்தல்
#அனைவருக்கும் -குறிப்பாக-பின்தங்கிய சமூகத்தினருக்கு - உணவு மற்றும் சத்துணவை உறுதி செய்தல்
#அனைவர்க்கும் பாதுகாக்கப்பட்ட குடி நீர் , அடிப்படை சுகாதார வசதிகள், அடிப்படைக் கல்வி, தங்குமிடம் ஆகியவற்றை குறித்த கால வரையறைக்குள் உறுதி செய்தல்
#மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துதல்
#அனைத்து  நிலைகளிலும் உள்ள மக்களின் ஒத்துழைப்பு மற்றும் பங்கேற்பின் மூலம் வளர்ச்சிப் பணிகளின் காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப் படாமல் காத்தல்
#பெண்கள் மற்றும் சமுதாயத்தில் பின் தங்கிய - அட்டவனை இன மக்கள், பிற பின் தங்கிய இனத்தவர்கள் மற்றும் சிறுபான்மை இனத்தவர் ஆகியோருக்கு அதிகாரம் வழங்குதல்
#பஞ்சாயத்து ராஜ், கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் ஆகியவற்றில் மக்களின் பங்களிப்பை அதிகரிக்க ஊக்கப்படுத்துதல்
#சுய சார்பை உருவாக்குவதற்கான முயற்சிகளை வலுப்படுத்துதல்.
  1. மக்களின் வாழ்க்கைத் தரம்
  2. வேலை வாய்ப்பு
  3. அனைத்துப் பூகோளப் பகுதிகளும் சீராக வளர்ச்சி பெறுவதை உறுதி செய்தல

ஒன்பதாம் ஐந்தாண்டுத் திட்டம் (1997-2002)

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்துக்கும் இடையில் உள்ள ஒருங்கிணைந்த உறவை ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டம் அங்கீகரித்தது.காலங் காலமாக நிலவி வரும் சமுதாய வேறுபாடுகளைக் களைந்து ஏழை எளிய மக்களின் நல்வாழ்வுக்கு ஆதரவு அளிக்கும் கொள்கைகளை உருவாக்குவதில் அரசு உறுதியாக உள்ளது."சமூக நீதி மற்றும் சமத்துவத்துடன் இணைந்த வளர்ச்சி " என்பதே இத்திட்டத்தின் தாரக மந்திரம்.
தேசிய வளர்ச்சிக் குழு, கீழ் காண்பவற்றை ஒன்பதாவது ஐந்தானண்டுத் தித்தின் முக்கிய நோக்கங்கள் எனக் குறிப்பிட்டது.
  1. வேலை வாய்ப்பைப் பெருக்குதல் மற்றும் வறுமையை ஒழிப்பு ஆகியவற்றுக்காக விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளித்தல்
  2. விலைவாசிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அதே நேரத்தில் வளர்ச்சி வேகத்தை அதிகரித்தல்
  3. அனைவருக்கும் -குறிப்பாக-பின்தங்கிய சமூகத்தினருக்கு - உணவு மற்றும் சத்துணவை உறுதி செய்தல்
  4. அனைவர்க்கும் பாதுகாக்கப்பட்ட குடி நீர் , அடிப்படை சுகாதார வசதிகள், அடிப்படைக் கல்வி, தங்குமிடம் ஆகியவற்றை குறித்த கால வரையறைக்குள் உறுதி செய்தல்
  5. மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துதல்
  6. அனைத்து நிலைகளிலும் உள்ள மக்களின் ஒத்துழைப்பு மற்றும் பங்கேற்பின் மூலம் வளர்ச்சிப் பணிகளின் காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப் படாமல் காத்தல்
  7. பெண்கள் மற்றும் சமுதாயத்தில் பின் தங்கிய - அட்டவனை இன மக்கள், பிற பின் தங்கிய இனத்தவர்கள் மற்றும் சிறுபான்மை இனத்தவர் ஆகியோருக்கு அதிகாரம் வழங்குதல்
  8. பஞ்சாயத்து ராஜ், கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் ஆகியவற்றில் மக்களின் பங்களிப்பை அதிகரிக்க ஊக்கப்படுத்துதல்
  9. சுய சார்பை உருவாக்குவதற்கான முயற்சிகளை வலுப்படுத்துதல்.
மக்களின் வாழ்க்கைத் தரம்
வேலை வாய்ப்பு
அனைத்துப் பூகோளப் பகுதிகளும் சீராக வளர்ச்சி பெறுவதை உறுதி செய்தல்

பத்தாம் ஐந்தாண்டுத் திட்டம் (2002-2007)

பத்து விழுக்காடு வேகத்தில் உலகிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியப் பொருளாதாரத்தை மாற்றுவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.முதலீட்டாளர்களுக்கு இணக்கமான சந்தை சீர்திருத்தங்கள் மற்றும் வளர்ச்சிக்கு சாதகமான சூழ் நிலையை உருவாக்குதல் ஆகியவை முன்னுரிமை பெற்றன.தனியார் துறையினர் , பொருளாதார வளர்ச்சியில் துடிப்புடன் பங்கேற்பதையும் நிதித்துறையில் வெளி நாட்டினர் அதிக அளவில் பங்கேற்பதையும் அரசு வரவேற்றது. வர்த்தக நிறுவனங்கள் வெளிப்படையுடன் செயல்படுவதற்கும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் அதிக ஊக்கம் அளிக்கப்பட்டது. வறுமையை ஒழித்தல்; கல்வியைப் பரப்புதல் ஆகியவை அதிக கவனம் பெற்றன 2007 ஆம் ஆண்டு வாக்கில் வனப்பரப்பை 25 விழுக்காடு அளவுக்கு உயர்த்துதல்; அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடி நீர் வழங்குதல்

கண்காணிக்கத்தக்க இலக்குகள்

  1. வறுமையைக் குறைப்பது
  2. வேலைவாய்ப்பைப் பெருக்குவது
  3. 2007 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் அடிப்படைக் கல்வியை எட்டச் செய்வது
  4. மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தை 16.2 விழுக்காடாகக் குறைப்பது
  5. 2007 ஆம் ஆண்டுக்குள் கல்வி ஏற்றோர் எண்ணிக்கையை எழுபத்தைந்து விழுக்காடாக உயர்த்துவது
  6. குழந்தை இறப்பு விகிதத்தை குறைப்பது
  7. பேறுகாலத்தில் பெண்கள் இறக்கும் விகிதத்தைக் குறைப்பது
  8. வனப் பரப்பை அதிகரிப்பது
  9. 2012 ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க வழி செய்தல்
  10. மாசு பட்ட அனைத்து ஆறுகளையும் 2007 ஆம் ஆண்டுக்குள் தூய்மைப் படுத்துவது

பதினோராம் ஐந்தாண்டுத் திட்டம் (2007-2012)

  1. மொத்த உள் நாட்டு உற்பத்தியை பத்து விழுக்காடு அளவுக்கு உயர்த்துதல்
  2. எழு நூறு இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் ; ஆரம்பப் பள்ளிகளில் வசதிகளை மேம்படுத்துதல்
  3. குழ்ந்தை இறப்பு விகிதத்தை 28 ஆகக் குறைத்தல்; அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு வழங்குதல், வனப் பரப்பளவை ஐந்து விழுக்காடு புள்ளி அளவுக்கு உயர்த்துதல்

பன்னிரண்டாம் ஐந்தாண்டு திட்டம் (2012-17)

பன்னிரண்டாம் ஐந்தாண்டு திட்டம் விரைவில் தொடங்க உள்ளது.இதற்கான் கொள்கை வரைவினை இறுதி செய்யும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது.
  இங்கு கிளிக் செய்து டவுன் லோடு செய்யவும்
இந்தி பொருளாதார புத்தகத்தை கிளிக் செய்யவும்

Friday 25 October 2013

குருப்-2 தேர்வில் மாற்றம்

      குருப்-2 தேர்வில் மாற்றத்தை டி.என்.பி.சி. கொண்டு வந்துள்ளது.

பொதுவாக டி.என்.பி.சி. group 2-ல் ஒரே தேர்வு தான் உண்டு. ஆனால் இப்போது குருப்-1 தேர்வு போல, குருப் -2 தேர்விலும் முதல்நிலை தேர்வு, மெயின் தேர்வு என்று கொண்டு வரப்பட்டுள்ளது.

          அதாவது, மெயின் தேர்வில் ஒரு கேள்வி கொடுத்து அதற்கு சரியான விடை உள்பட 4 விடை கொடுக்கப்பட்டிருக்கும். அதில் சரியான விடையை டிக் செய்தால் மதிப்பெண் உண்டு. அதற்கு ஆப்ஜெக்டிவ் முறை என்று பெயர். அதே நேரத்தில் இந்த தேர்வு எழுதும் பட்டதாரிகள் எழுத்து திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும். அவர்களின் அறிவு மற்றும் ஆற்றலை சோதிக்கும் வகையில் கட்டு ரைகள் கேட்கப்பட உள்ளது. 

இந்த புதிய முறையின் காரணமாக திறமை உள்ள பட்டதாரிகள் மட்டுமே பணிக்கு வரமுடியும். 

           இந்த குருப்-2 தேர்வில் நேர்முகத்தேர்வு இல்லாத பட்சத்தில் மெயின் தேர்வில் அதிக மார்க் எடுத்தால் அவர்களுக்கு வேலை கொடுக்கப்படும். நேர்முகத் தேர்வு உள்ள பணிகளில் நேர்முகத்தேர்வில் உள்ள மதிப்பெண்ணும், மெயின் தேர்வில் எடுத்த மதிப்பெண்ணும் சேர்த்து கூட்டி அவர்கள் அதிக மதிப்பெண் பெற்றிருந்தால் இட ஒதுக்கீடு அடிப்படையில் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


Friday 27 September 2013

tnpsc general tamil study material (பொதுதமிழ்)

            பொதுதமிழ் .க்கான material -க்கு  கீழே கிளிக் செய்யுவும்

                   இவற்றை நான் பின்வரும் தலைப்புக்களில் பிரித்து வெளியிடுகிறேன்

    இவற்றை நீங்கள் கிளிக் செய்தாலே போதுமானது .உங்களுக்கு தேவையானவற்றை நீங்கள் டவுன்லோடு செய்து கொள்ளலாம்

     இதனை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்


Thursday 26 September 2013

பொதுதமிழ் தயார் செய்வது எப்படி

பொது தமிழில்  செய்யுள் பற்றிய குறிப்புகளை பின் வருமாறு எடுக்கலாம்

பாடத்திட்டத்தின் படி பார்த்தால் செய்யுளுக்கும் நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.ஆகையால் நீங்கள் செய்ய வேண்டியத ஒன்றே ஒன்றுதான்‘
(செய்யுளில் சைவ , வைணவ இலக்கியங்கள் , பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நுல்கள் , மறுமலர்ச்சி பாடல்கள் , தொடர் நிலை செய்யுள்கள் பற்றிய குறிப்புகள் என பிரித்துக்கொள்ளுங்கள்)
அடுத்து ,

பின்வரும் தலைப்புகளில் பிரித்து கொள்ளுங்கள்(ஒவ்வொரு இலக்கியத்தையும்)
  1. ஆசிரியர் பெயர்-நுல்கள்
  2. புகழ்பெற்ற வாக்கியம்(முக்கியமாக மனப்பாட படல்கள் நன்கு தெரிந்து வைத்தக்கொள்ளுங்கள்)
  3. மனப்பாட பாடல்களை எளிதாக நினைவில் கொள்ள அதன் பொருளை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டாலே போதுமானது
  4. ஆசிரியரை பாராட்டியவர்
  5. நுல்களை தொகுத்தவர். தொகுப்பித்தவர்(எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நுல்களில்)
  6. கடவுள் வாழ்த்து பாடியவர்கள்
  7. ஆசிரியரின் பட்டப்பெயர்(இயற்பெயர்,சிறப்புபெயர்)
  8.  எழுதிய பிற நுல்கள்
  9. பாராட்டியவர்களின் பொன் மொழிகள்(எ.கா.பாரதிதாசன்,பாரதியார் -வள்ளுவரை பாராட்டிய பாடல்)
  10. நுல்களை சிறப்பிக்க  நமது அரசு செய்த செயல்கள் என்று குறிப்பு எடுத்துக்கொள்ளுங்கள் 




Wednesday 25 September 2013

பொதுதமிழ்

டி.என்.பி.சி் தேர்வுக்கு தயாா்  செய்ய இதோ டிப்ஸ்

      முதலி்ல் பொது தமி்ழ்க்கு தயார் செய்வதை பாா்ப்போம்
                  1.பாடத்தி்ட்டத்தை நன்கு படித்து கொள்ளு்ங்கள்
                  2.சமச்சீ்ா பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படுவதால் 1 முதல் 10 -ம்  வகுப்பு
                    வரையிலான தமிழ் பாடபுத்தகங்களை நன்கு படித்துக்கொள்வது முக்கியமானது ஆகும்
               3.இதனை நீங்கள் தனி்தனியாக சில தலைப்புகள் அடிப்படையி்ல் பிாித்து்ககொள்ள    வேண்டு்ம்

உதாரணமாக பின்வரும் தலைப்புகளில் பிாி்தது கொள்ளலாம்

உரைநடையை எடுத்துக் கொண்டால்

1.தலைவா்களை பற்றிய குறிப்புகள் 
                                      (அம்பேத்கர், காமராஜர், இராமானுஜம், காந்தியடிகள், மு.வரததாசனார், )

 2,தமிழ் அறிஞர்கள்(மறைமலை அடிகளார், வீரமாமுனிவர், பரிதி மாற்கலைஞர்,பம்மல் சம்பந்தனார், தாயுமானவர், மற்றும் பலர்)  

பிறப்பு, இறப்பு -காலம், இடம்
பிறந்த ஊர், பெற்றோர்
படித்த இடம்
தொண்டுகள்
அவரது சாதனைகள்
கூறிய பொன்மொழிகள்
பட்டப்பெயர்கள், பாராட்டியவர்கள்

     (இப்பொழுது காலம் பற்றிய குறிப்புகள் கேட்கப்படுவதால்                   ஆண்டுகளை தவறாமல் படியுங்கள்)



 3,ஊரும், பேரும்,நாடகக்கலை,மதுரை பற்றிய குறிப்புகள் என பிரித்துக்கொள்ளுங்கள்

ஊரும் பேரும்
குறிஞ்சி நில ஊர்கள்(எ.கா மட்டும்) என்று ஐவகை நிலத்திற்கு ஏற்றவாறு பிரித்து படியுங்கள்
மதுரை-பாராட்டிய நுல் குறிப்பு (பத்துபர்ட்டு,மதுரைக்காஞ்சி பற்றியன இவை எல்லாம் தமிழ் பாடபுத்தகத்திலே உள்ளன ,ஆகையால் கவலையை விட்டு சம்ச்சீர் பாபுத்தகத்தை மட்டும் படியுங்கள்)

பாராட்டியவர்கள் (முக்கியமாக அவர்கள் கூறிய பொன் மொழிகள்-கூறியவர்)


 நாளை இதை பற்றி விரிவாக எழுதுகிறேன்

அந்த பிளாக் நன்கு வளர கூகுள் பிளஸ்,.-ல் சேருங்களேன்.அப்பொழுதுதான் மேன் மேலும் கருத்துகள் அனைவரையும் சென்றடையும்




Friday 20 September 2013

books for tnpsc

டி.என்.பி.சி எழுதுபவரா நீ்ங்கள் 

                                இதனை படியுங்கள் நிச்சயம் வெற்றி நிச்சயம் 

முதலில் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான் 1-லிருந்து 10-வரை உள்ள சமச்சீ்ா் பாட புத்தகங்களை சேகாியு்ங்கள்

உங்களிடம் புத்தகங்கள் கிடைக்கவில்லையா  கவலையை விடுங்கள்

கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்தாலே போதும்

www.textbooksonline.tn.nic.in

உங்களுக்கு தேவையான அனைத்து புத்தகங்களையும்  டவுன்லோடு  செய்து கொள்ளலாம்.
         இது ஒரு இலவச இணைப்பு .நமது அரசு வழங்கியுளள வரப்பிரசாதம் என்றே சொல்லாம்.

  என்ன  டவுன்லோடு  செய்து வி்ட்டீர்களா !