Popular Posts

Friday 25 October 2013

குருப்-2 தேர்வில் மாற்றம்

      குருப்-2 தேர்வில் மாற்றத்தை டி.என்.பி.சி. கொண்டு வந்துள்ளது.

பொதுவாக டி.என்.பி.சி. group 2-ல் ஒரே தேர்வு தான் உண்டு. ஆனால் இப்போது குருப்-1 தேர்வு போல, குருப் -2 தேர்விலும் முதல்நிலை தேர்வு, மெயின் தேர்வு என்று கொண்டு வரப்பட்டுள்ளது.

          அதாவது, மெயின் தேர்வில் ஒரு கேள்வி கொடுத்து அதற்கு சரியான விடை உள்பட 4 விடை கொடுக்கப்பட்டிருக்கும். அதில் சரியான விடையை டிக் செய்தால் மதிப்பெண் உண்டு. அதற்கு ஆப்ஜெக்டிவ் முறை என்று பெயர். அதே நேரத்தில் இந்த தேர்வு எழுதும் பட்டதாரிகள் எழுத்து திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும். அவர்களின் அறிவு மற்றும் ஆற்றலை சோதிக்கும் வகையில் கட்டு ரைகள் கேட்கப்பட உள்ளது. 

இந்த புதிய முறையின் காரணமாக திறமை உள்ள பட்டதாரிகள் மட்டுமே பணிக்கு வரமுடியும். 

           இந்த குருப்-2 தேர்வில் நேர்முகத்தேர்வு இல்லாத பட்சத்தில் மெயின் தேர்வில் அதிக மார்க் எடுத்தால் அவர்களுக்கு வேலை கொடுக்கப்படும். நேர்முகத் தேர்வு உள்ள பணிகளில் நேர்முகத்தேர்வில் உள்ள மதிப்பெண்ணும், மெயின் தேர்வில் எடுத்த மதிப்பெண்ணும் சேர்த்து கூட்டி அவர்கள் அதிக மதிப்பெண் பெற்றிருந்தால் இட ஒதுக்கீடு அடிப்படையில் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


No comments:

Post a Comment